For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாபப் பாதைக்குத் திரும்பியது மகிந்திரா சத்யம் நிறுவனம்

Google Oneindia Tamil News

Mahindra Satyam
ஹைதராபாத்: மாபெரும் ஊழலில் சிக்கி தேய்ந்து போன சத்யம் நிறுவனம், பின்னர் மகிந்திரா நிறுவனத்தால் வாங்கப்பட்ட பின்னர் தற்போது முதல் முறையாக லாபத்தைப் பார்த்துள்ளது. நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதாக மகிந்திரா சத்யத்தின் தலைவர் வினீத் நய்யார் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் சத்யம் நிறுவனம் லாபத்தை பார்த்துள்ளதாக நய்யார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் பொறுமையுடன் கூடிய செயல்பாடுகளே நிறுவனம் லாபப் பாதைக்குத் திரும்ப முக்கியக் காரணம் என்றார்.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சத்யம் நிறுவனத்தை கடந்த 2009ம் ஆண்டு மகிந்திரா நிறுவனம் வாங்கியது நினைவிருக்கலாம். இந்த நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 225.1 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த மார்ச் மாத காலாண்டில் இந்த நிறுவனத்தின் நஷ்டக் கணக்கு ரூ. 327 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சத்யத்தின் வருவாய் ரூ. 1434 கோடியாக இருந்தது. இது கடந்த காலாண்டை விட 4.3 சதவீதம் அதிகமாகும்.

ஜூன் மாத காலாண்டில் ரூ. 98 கோடி அளவுக்கு லாபம் ஈட்டுவோம் என முன்பு சத்யம் நிறுவனம் கூறியிருந்தது. இருப்பினும் அதை விட அதிக அளவிலான லாபத்தை ஈட்டியுள்ளது.

English summary
Software services provider Mahindra Satyam swung to profit in the three months ended 30 June from a loss in the preceding quarter as it earned more from its biggest clients and emerging markets. The company, which chairman Vineet Nayyar has likened to a patient recovering from a near-death experience, declared that it remained on course for meeting a three-year deadline for return to health. Mahindra Satyam earned a profit after tax of Rs225.2 crore in the June quarter, compared with a net loss of Rs327 crore in the March quarter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X