For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியா தலைவர் அரவிந்த் ஜாதவ் டிஸ்மிஸ்; புதிய தலைவர் ரோஹித் நந்தன்

By Shankar
Google Oneindia Tamil News

Air India Logo
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான அரவிந்த் ஜாதவ் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி ரோஹித் நந்தன் ஏர் இந்தியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் பெறும் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வின் மூலம், அரவிந்த் ஜாதவுக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் எந்தவிதமான அனுபவமும் இல்லை என்றும் ஒரு வருடத்துக்கு முன்பு இந்த பணிக்கு அவரது பெயர் நிராகரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

பைலட்டுகளின் வேலைநிறுத்தத்தை சரிவர ஜாதவ் கையாளவில்லை என்று அவர் மீது புகார் கூறப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனம் குறித்தும், அதன் நிதிநிலைமை குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதன் தலைவர் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக வந்துள்ள ரோஹித் நந்தன் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இணைச் செயலராக இருந்தவர்.

English summary
Rohit Nandan, a joint secretary in the Union Ministry of Civil Aviation, has been appointed as chairman and managing director of Air India, replacing Arvind Jadhav, who was given the marching orders on Thursday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X