For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1,000 ரூபாய் நாணயம் வெளியிடுகிறது மத்திய அரசு!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது மத்திய அரசு. இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தெரிவித்தார்.

இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ஆனால் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். ஒரு ரூபாய் நோட்டு மட்டும் இந்திய அரசு என்ற பெயரில் வெளியாகும். மற்ற நோட்டுகள் மத்திய ரிசர்வ் வங்கி பெயரில் வெளியாவதைக் காணலாம்.

இப்போது ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை.

குறிப்பிட்ட சில தருணங்களில் சிறப்பு வெளியீடாக அதிக மதிப்பு கொண்ட நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலுடன் இந்திய அரசு வெளியிடும்.

அந்த வகையில் இப்போது ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது.

1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது. அந்த மசோதா நேற்று மேல்-சபையில் தாக்கல் ஆனது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், "ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி இந்த நாணயங்களின் தயாரிப்பு, மற்றும் வினியோகம் இருக்கும்'' என்றார். இந்த நாணயம் எப்போது வெளியிடப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் 10 லட்சம் நோட்டுகளில் 8 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கள்ள நோட்டுகளை அதிக அளவில் இந்தியாவுக்குள் அனுப்பி, இந்திய பொருளாதாரத்துக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் முயற்சியில், சில அண்டை நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஏற்கெனவே 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது நினைவிருக்கலாம்.

English summary
Parliament on Thursday passed the Coinage Bill 2009 paving the way for minting of coins up to Rs 1,000 denomination. Replying to the debate on the Bill that was passed by the Rajya Sabha, finance minister Pranab Mukherjee said at present the clause on circulation of coins of Rs 1,000 denomination has been inserted only as an enabling provision in the coinage law. He did not indicate when it could be introduced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X