For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த ஜாமீனில் செல்ல மறுத்தார் கிரண் பேடி- தான் சீரமைத்த திஹார் சிறையிலேயே அடைக்கப்படுகிறார்

Google Oneindia Tamil News

Kiran Bedi
டெல்லி: எந்த திஹார் சிறையில் டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றினாரோ, எந்த திஹார் சிறையை மறு சீரமைத்தாரோ அதே சிறையில் அடைக்கப்படவுள்ளார் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி.

அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர் கிரண் பேடி. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, டெல்லி காவல்துறை ஆணையர் பதவியை தனக்குத் தராமல் காங்கிரஸ் அரசு பாரபட்சம் செய்ததால் அதிருப்தி அடைந்து பதவியிலிருந்து விலகினார்.

திஹார் சிறையின் டைரக்டர் ஜெனரலாக இவர் இருந்தபோதுதான் சிறையை முழுமையாக சீரமைத்தார். அங்கு கைதிகளை அடிமைகள் போல அடைத்திருந்த நிலையை முழுமையாக மாற்றி நாட்டில் உள்ள சிறைகளுக்கெல்லாம் முன்னுதாரணமாக மாற்றியமைத்தார். இந்த நிலையில் அதேசிறையில் தற்போது அவர் அடைக்கப்படவுள்ளார்.

அன்னா ஹஸாரே குழுவில் இடம் பெற்றுல ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதாவுக்காகவும் போராடி வருகிறார் பேடி. இன்று காலை அவர் ராஜ்காட்டுக்கு வந்தபோது அவரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் சொந்த ஜாமீன் கொடுத்து விட்டு செல்லலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதை கிரண் பேடி நிராகரித்து விட்டார். தான் சொந்த ஜாமீனில் விடுதலையாக விரும்பவில்லை என்று கூறி விட்டார்.

இதனால் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர் போலீஸார்.

இதுகுறித்து கிரண் பேடி கூறுகையில், என்னை சொந்த ஜாமீனில் செல்லுமாறு கேட்டனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதனால் திஹார் சிறையில் நான் அடைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

English summary
Former IPS officer Kiran Bedi today refused to give a personal bond and get herself released after she was taken into preventive detention for defying prohibitory orders. "I have been asked to offer bail but I have refused. I may be sent into judicial custody in Tihar jail," Bedi told . Bedi was taken into custody at Rajghat when she arrived there to take part in the protest announced by Anna Hazare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X