For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவுப் பணவீக்கம் 9.03 சதவீதமாகக் குறைந்தது!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடியும் வாரத்துக்கான உணவுப் பணவீக்கம் 9.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் உணவுப் பணவீக்கம் கடந்த வாரம் 9.90 சதவீதமாக இருந்தது.

இந்த வாரம் அதிலிருந்து 0.87 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு பணவீக்கம் 14.51 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரத்தில் வெங்காயம், காய்கறிகள் மற்றும் உணவு தாயனியத்தின் விலை உயர்ந்திருந்தாலும், உணவுப் பணவீக்க குறியீட்டெண் குறைந்து காணப்பட்டது புதிராக உள்ளதென புள்ளியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

குறியீட்டெண்களில் வாராவாரம் மாறுதல் தெரிந்தாலும் விலை மட்டும் சீராக உயர்ந்து வரும் போக்கு காணப்படுவது கொள்கை வகுப்பாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.

English summary
Food inflation fell to 9.03 per cent for the week ended August 6, even as the price of all items barring pulses rose on an annual basis. Food inflation, as measured by the Wholesale Price Index (WPI), stood at 9.90 per cent in the previous week. The rate of price rise of food items was 14.51 per cent in the first wee of August, 2010.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X