For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலிகளைக் களைய 'பயோ-மெட்ரிக்' ரேஷன் கார்டுகள்: தமிழக அரசு திட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

Bio Metric
சென்னை: தமிழகத்தில் புழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் நான்கு மாதங்களில் காலாவதியாகிவிடும் என்றும், இதையடுத்து கைரேகை மற்றும் கண் பாவை உள்ளிட்டவற்றின் அடையாளங்களுடன் நவீன பயோ-மெட்ரிக் முறையிலான ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டே மகாராஷ்டிர அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தமிழக சட்டசபையில் உணவுத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் புத்திசந்திரன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: 2004 முதல் 2010 மார்ச் வரை மத்திய அரசால் 59,852 கிலோ லிட்டராக வழங்கப்பட்டு வந்த மாதாந்திர மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 2010-11ல் 52,804 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டு, ஜுலை 2011-ல் வெகுவாக குறைக்கப்பட்டு 44,572 கிலோ லிட்டர் என வழங்கப்படுகிறது.

இருப்பினும் மண்ணெண்ணெய் நுகர்வு 52 ஆயிரம் கிலோ லிட்டராக உள்ளது. எனவே ஜுலை முதல் மண்ணெண்ணெய் வினியோகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்ணெண்ணெய் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு மாதம் 65,140 கிலோ லிட்டர் ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கேஸ் சிலிண்டர்கள் இணைப்பு முத்திரையிடும் பணி 50.24 லட்சம் குடும்ப அட்டைகளில் பதிவு செய்யப்படாமல் உள்ளது. பதிவு செய்யாத அட்டைகளை கண்டறிந்து முத்திரையிட்டு அதன் மூலம் 3 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் சேமிக்க இயலும்.

தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் 31.12.2011 தேதியுடன் முடிவடைகிறது. ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குடும்ப அட்டையில் பெயரை பதிவு செய்தால் அதனை கண்டுபிடிக்க வழிவகைகள் இல்லை. இதன் காரணமாக போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது.

இந்தப் பிரச்சனைகளை களைய தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக பயோ-மெட்ரிக் முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்குநர், மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பாவையை பதிவு செய்து பிரத்தியேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனைப் பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டைகள் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 7,21,38,958. குடும்ப அட்டை தொகுப்பின்படி உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,37,57,610. வித்தியாசம் 1,16,18,652 உள்ளதற்கான காரணம் ஒரே பெயர் பல அட்டைகளில் இருப்பதும், போலி அட்டைகளும் ஆகும். 100 சதவீதம் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து 31 மாவட்டங்களில் 14,29,374 போலி அட்டைகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2,65,027 அட்டைகள் போலி என கண்டறிந்து ரத்து செய்யப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி 'அம்மா போல்' இருக்கிறது-அமைச்சர்:

உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லம் பாஷா, ரேஷனில் வழங்கும் அரிசி நன்றாக இல்லை என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய உணவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கடந்த ஆட்சியில் தான் ரேஷன் அரிசி சாப்பிடவே முடியாதபடி இருந்தது, இப்போது ரேஷனில் வழங்கும் அரிசி அம்மா' மாதிரியே இருக்கிறது என்று பொது மக்களே சொல்கிறார்கள் என்றார்.

இதைக் கேட்டு முதல்வர் ஜெயலலிதாவும் சிரித்தார்.

English summary
In a move that aims to weed out bogus ration cards and curb black-marketing of subsidised food commodities, Tamil Nadu has decided to introduce bio-metric ration cards next year, going one up on an earlier proposal to shift to bar-coded ration cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X