For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாரி ஸ்டிரைக்- ரூ.10 கோடி தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம், 7 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

Google Oneindia Tamil News

Lorry Strike
தூத்துக்குடி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 11 ஆயிரத்து 500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.10 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், அரிசி மூட்டைகள், பீடி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் 4 ஆயிரம் தீப்பெட்டி ஆலைகளும், 250 பகுதி நேர தீப்பெட்டி ஆலைகளும், 25 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகின்றன. இங்கிருந்து தினமும் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் கொண்டு செல்லப்படுகிறது.

லாரிகள் வேலை நிறுத்தத்தினால் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய ரூ.10 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், அரிசி மூட்டைகள் தேக்கமைடந்துள்ளன. இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீப்பெட்டித் தொழிலுக்கு தேவையான மரத்தடிகள், மரக்குச்சிகள் கேரளாவில் இருந்து வராதததாலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளை பொறுத்தவரை உள்ளூர் காய்கறி வரத்து உள்ளதால் தற்போதைக்கு தட்டுப்பாடு இல்லை. மேலை நிறுத்தம் தீவிரமடையும் பட்சத்தில் காய்காறிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

English summary
Lorry strike has affected matchbox, beedi business. Rs. 10 crore worth matchbox bundles, rice sacks have become stagnant in Tirunelveli, Tuticorin and Virudhunagar districts. 7 lakh people working in match box companies have got affected by the strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X