For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி பீட்சா ஹட்டின் அனைத்து கிளைகளிலும் ஒயின், பீர் கிடைக்கும்

By Siva
Google Oneindia Tamil News

Pizza Hut
மும்பை: பீட்சா ஹட்டின் அனைத்து கிளைகளிலும் இனி பீர், ஒயின் கிடைக்கும். இந்த திட்டம் முதலில் டெல்லி மற்றும் பெங்களூரில் தான் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இது குறித்து பீட்சா ஹட்டின் விளம்பரப் பிரிவு தலைவர் சுனய் பாசின் கூறியதாவது,

நாங்கள் டெல்லியில் உள்ள 2 கடைகளில் பீர் மற்றும் ஒயினும், பெங்களூரில் உள்ள 5 கடைகளில் ஒயினும் அளிக்கிறோம். இது படிப்படியாக மற்ற கிளைகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து கிளைகளிலும் இந்த சேவையை விரிவுபடுத்துவது தான் எங்கள் நோக்கம். சிறிய நகரங்களில் கிராக்கி அதிகரித்து வருவதால் வரும் 2015-க்குள் டயர் II, டயர் III நகரங்களில் பீட்சா ஹட் திறக்கப்படும்.

வரும் 2015-க்குள் தற்போதுள்ளதைவிட 50 சதவீதம் அதிக கிளைகள் திறக்கவிருக்கிறோம். அதாவது 180 முதல் 200 கிளைகள் திறக்கவுள்ளோம் என்றார்.

ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலான பீட்சா ஹட் 25 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pizza Hut is going to serve wine and beer in all its outlets. It first tests this new plan in Delhi and Bangalore. It has planned to open 180-200 outlets by 2015 in Tier-II and Tier-III cities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X