For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்

Google Oneindia Tamil News

Washington
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை கடும்நிலநடுக்கம் தாக்கியது. இதனால் க்கள் பெரும் பீதியடைந்தனர். நியூயார்க் வரை இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காணப்பட்டதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

வாஷிங்டனைத் தாக்கிய நிலநடுக்கத்தின் அளவு 6.0 ரிக்டர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் மக்கள் பெரும் அச்சமடைந்து, வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். பல இடங்களில் கட்டடங்கள் பல விநாடிகளுக்கு ஆட்டம் கண்டன. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

வடக்கு விர்ஜீனியாவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பென்டகனில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வாஷிங்டனை பூகம்பம் தாக்கியது பெரும் வியப்பாக பார்க்கப்படுகிறது. இதுவரை வாஷிங்டனை பூகம்பம் எதுவும் தாக்கியதில்லை என்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நியூயார்க்கிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

காஷ்மீரி்ல் நிலநடுக்கம்

காஷ்மீரின் பள்ளதாக்கு பகுதியில் நேற்று காலை 6.53 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என இயற்கை பேரழிவு மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் அமீர் அலி தெரிவித்தார்.

காஷ்மீரில் இந்த வாரத்தில் ஏற்பட்டுள்ள 3-வது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A strong earthquake measuring about 6.0 was felt in the US capital and its surrounding areas on Tuesday, forcing people to flee their offices as far away as New York. While there was no immediate report of any casualties or damage to the buildings, there was panic among the people, with buildings shaking for several seconds, taking everyone by surprise. The epicenter of the earthquake was reported to be in Northern Virginia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X