For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்திற்கு திடீரென இன்றுகாலை பாஜக எம்.பியும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி வருகை தந்தார்.

அன்னா ஹஸாரே இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வருண் காந்தி, தனி நபர் மசோதாவாக ஜன் லோக்பால் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வேன் என்று அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

இன்று ராம்லீலா மைதானத்திற்கு நேரில் வந்த வருண் காந்தி அன்னாவின் ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வருகை முற்றிலும் கட்சி சார்பற்றது. பொதுமக்களில் ஒருவனாக, வருண் காந்தியாகத்தான் இங்கு வந்துள்ளேன். பாஜக எம்.பியாக வரவில்லை.

அன்னாவின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஒரு சாதாரண இந்தியப் பிரஜையாக எனக்கும் பொறுப்புணர்வு உண்டு என்றார் வருண் காந்தி.

English summary
BJP MP Varun Gandhi sprang a surprise on Wednesday morning as he reached Ramlila Maidan to extend support to Anna Hazare. Varun Gandhi, who has been vocal in his support for Anna Hazare's movement, told reporters that his visit had nothing to do with his party. He clarifed that he had come to Ramlila Maidan as a common man as he supported the cause of Anna Hazare. When asked how he could toe a different line from the party, Varun said he was also responsible to the citizens of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X