திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினரை கைது செய்வோம்-'அட்டாக்' பாண்டியை சிறையில் அழகிரி பேட்டி!
திருச்சி & மதுரை: தனக்கு மிக நெருக்கமானவரான 'அட்டாக்' பாண்டியை சந்திக்க மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று திருச்சி சிறைக்கு வந்தார்.
அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று எஸ்ஸார் கோபி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் அட்டாக் பாண்டியையும் சந்திக்க அழகிரி திருச்சி சிறைக்கு அழகிரி வந்தார். ஆனால், மத்திய அமைச்சருக்கான புரோட்டோகால் படி வராததால், அவரது காரை போலீஸார் சிறை வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவரும் உடன் வந்த மத்திய இணையமைச்சர் நெப்போலியனும் நடந்தே சிறை வளாகத்துக்குள் சென்றனர்.
ஆனால், உள்ளே சென்ற அவர்களை எஸ்ஸார் கோபி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பார்க்க மட்டுமே சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளதால், அவரை வியாழக்கிழமைகளில் மட்டுமே சிறப்பு சிறப்பு அனுமதி பெற்று சந்திக்க முடியும் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து இன்று முறையான அனுமதியுடன் அட்டாக் பாண்டியை சந்திக்க அழகிரி வந்தார். பின்னர் பாண்டியை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் வெளியே வந்த அழகிரியிடம், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதா அரசின் 100 நாள் சாதனையில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். இது திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நடவடிக்கை தொடரும்.
பொய் வழங்கு போடும் அதிகாரிகளை நாங்கள் கைது செய்வோம். பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது நாங்களும் வழக்குப் போட்டு கைது செய்வோம் என்றார்.
முன்னதாக நில அபகரிப்பு வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்க நேற்று மாலை 3.35 மணி அளவில் அழகிரி சிறைக்கு வந்தார்.
அவருடன் மத்திய அமைச்சர் நெப்போலியன், முதன்மை மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, வழக்கறிஞர்கள் மோகன்குமார், லிங்கதுரை ஆகியோரும் வந்திருந்தனர்.
சிறைக்குள் ஜெயிலர் அறையில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, மின்னல்கொடி, எஸ்ஸார் கோபியின் தம்பி ஈஸ்வரன், கவுன்சிலர் மலைச்சாமி, மருத்துவர் நவநீதகிருஷ்ணன், திண்டுக்கல் விஜயன் ஆகியோரை அழகிரி சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அழகிரி கூறியதாவது,
எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். மாறாக தைரியமாக சந்தி்ப்போம். திமுகவினர் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகள் போட்டவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடருவோம் என்றார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications