For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனவெறி கொலையில் ஈடுபட்ட ராஜபக்சேவை கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்-டி.ஆர்.பாலு

Google Oneindia Tamil News

TR Baalu
டெல்லி: இனவெறி படுகொலைகளை நடத்திய ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

லோக்சபாவில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார்.

அவர் பேசுகையில், போஸ்னியாவில் இனவெறிப் படுகொலைகளை நடத்திய அந்த நாட்டு ராணுவத் தளபதியை சர்வதேச கோர்ட் தண்டித்துள்ளது. அப்படி இருக்கையில் அதேபோன்ற தண்டனையை ஏன் ராஜபக்சேவுக்குத் தர முடியாது.

ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளைக் கூட இலங்கை அரசு தரவில்லை. முகாம்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டனர். இன்னும் கூட அவர்களுக்கு விடிவு பிறக்கவில்லை. இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையே சொல்கிறது.

முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கும், சித்திரவதைக்கும் உள்ளானார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிப்புக்குள்ளானார்கள்.

இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும். தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையை இந்தியா கடுமையாக கேட்டு் கொள்ள வேண்டும் என்றார் பாலு.

விவாதத்தை முற்றிலும் புறக்கணித்த ஆங்கில மீடியாக்கள்:

நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விவாதம் என்றோ நடந்திருக்க வேண்டியது. ஆனால் இடையில் அன்னா ஹஸாரே பிரச்சினை குறுக்கிட்டதால் அது தள்ளிப்போய்க் கொண்டே வந்தது.

நேற்று அதிமுக, திமுக, இடதுசாரிகள் இந்தப் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர். விவாதத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று ராஜ்யசபாவில் கடும் அமளியில்இறங்கினர். இதனால் ஒருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இன்றைக்கு விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் விவாதம் நடந்தது.

டெல்லியில் குண்டூசி தரையில் ரொம்ப நேரமாக கிடந்தால் அதை நேரடியாக ஒளிபரப்பி, வாய் வலிக்க வலிக்கப் பேசி லைவ் செய்யும் போக்கைக் கடைப்பிடிக்கும் ஆங்கில மீடியாக்கள், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்த விவாதத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட்டது வேதனையானது.

ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் கூட இந்த செய்தியைக் காணவில்லை. அத்தனை பேரும் அன்னா ஹஸாரே பின்னால்தான் போய்க் கொண்டுள்ளனர். எந்த சானலிலும் இதுகுறித்து ஒரு வரி செய்தியைக் கூட காண முடியாதது பெரும் வியப்பாக உள்ளது.

அப்படி என்னதான் செய்து விட்டார்கள் தமிழர்கள் இந்த தொலைக்காட்சிகளுக்கு என்று புரியவில்லை.

English summary
Murderer Rajapakse should be punished in International court, said DMK leader T.R.Baalu in Loksabha today. He participated in a debate on Lankan issue today. He slammed Lankan govt and Rajapakse for killinga thousands of Tamils during the fina phase of the Eelam war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X