For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் இருமடங்கு விலை உயர்வு

Google Oneindia Tamil News

Jasmine
நாகர்கோவில்: ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே பூக்கள் விலை சற்று ஏறியிருந்தது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டும், ஓணம் பண்டிகை உற்சவங்கள் இன்றே தொடங்குவதை முன்னிட்டும் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால் தோவளை மார்க்கெட்டில் இருந்து இப்போது பல ஆயிரம் கிலோ பூக்களுக்கு அட்வான்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவுக்கும் பூக்கள் டன் கணக்கில் ஆர்டர் செய்யப்பட்டு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளது.

குறிப்பாக மல்லிகை, பி்ச்சி பூக்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. விநாயகர் சிலைகள் அலங்கரிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே பலர் தோவளை மார்க்கெட்டில் பலர் மலர் ஆர்டர் போட்டி போட்டு செய்துள்ளனர்.

இதற்கிடையே பூக்கள் கிடைக்காமல் திருமணம் உள்ளிட்ட மங்கள சுப காரியங்களுக்கு பணம் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை, பூக்கள் கிடைத்தால் போதும் என்ற நிலையில் ஏராள்மானோர் பூக்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளனர்.

மல்லிகை பூ கிலோ ரூ.150லிருந்து ரூ.250க்கும், பிச்சி பூ ரூ.150லிருந்து ரூ.350க்கும் விலை அதிகரித்துள்ளது. இதர பூக்களின் விலையும் கிலோவுக்கு ரூ.50 முதல் 100 வரை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Flower prices are up in Kanniyakumari market on the eve of Onam and Vinayakar Chathurthi festivals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X