For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடல்வாழ் உயிரிகள் மிக வேகமாக அழிந்து வரும் 20 இடங்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிந்து வரும் 20 இடங்களில் அவற்றை காப்பற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

உலகின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றம், அமிலத் தன்மை அடையும் கடல்நீர், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

இது குறித்து ஆய்வில் இறங்கிய மெக்சிக்கோ தேசிய பல்கலை கழகத்தின் சாந்தரா போம்பா கூறுகையில், கடல்வாழ் உயிரினங்களில் 84 சதவீத உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் வகுட்டியா என்ற பாலூட்டி இனம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளன.

இவை காலிபோர்னியா வளைகுடாவின் வட பகுதிகளில் வாழ்கின்றன. இவை, ஹவாயான் தீவுகள், கலாபாகொஸ் தீவுகள், அமேசான் ஆறு, சான் பெலிக்ஸ், ஜூயன் பெர்னான்டஸ் தீவுகள், மெடிடேரியன் கடல், காஸ்பியன் கடல், இந்திய பெருங்கடலின் தென்பகுதி உள்ளிட்ட 11 இடங்களில் வகுட்டியா இனம் அழிந்து வருகிறது.

ஆனால், ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பெரு, அர்ஜன்டினா உட்பட 9 இடங்களில் கடல்வாழ் உயிரிகள் அதிகளவில் உள்ளதாக ஆய்வில் தெரிவந்துள்ளது. அட்லாண்டிக் சாம்பல் நிற திமிங்கலம், கடல்பசு, கரீபியன் மாங்க் சீல் ஆகிய இனங்கள் கடும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

கடந்த 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில், கடல்வாழ் உயிரிகளை தோல், கொழுப்பு உள்ளிட்ட பொருட்களுக்காக வேட்டையாடுவது அதிகரித்தது. சில உயிரிகளின் கறிக்காகவும் தற்போது வேட்டையாடப்படுகிறது. இவை கடல்வாழ் உயிரிகளின் அழிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

மேலும் இயற்கையில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை, பூமி வெப்பமாதல், கடல்நீரின் அமிலத் தன்மை அதிகரிப்பு, அமில மழை உள்ளிட்ட காரணங்களாலும் அவற்றின் அழிவு தவிர்க்க முடியாததாக உள்ளது.

English summary
From sea otters to blue whales, marine mammals are under stress from climate change, ocean acidification, hunting and other threats. Researchers have identified 20 important sites around the world where they say conservation efforts should concentrate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X