For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாப் முகர்ஜி பாதுகாப்பு அமைச்சராகவே அமெரிக்கா விரும்பியது: விக்கிலீக்ஸ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஏ. கே. அந்தோணிக்கு பதிலாக பிரணாப் முகர்ஜி தான் பாதுகாப்பு அமைச்சராக வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் கேபிளை மேற்கோள் காட்டி வி்க்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

ஏ. கே. அந்தோணி, அமெரி்ககா-இந்தியா இடையேயான இராணுவ ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல விவகாரங்களில் இழுத்தடிப்பதாக அமெரி்க்கா நினைக்கிறது. அதேசமயம், இந்தியா அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்வதால் வாஷிங்டன் மகிழ்ச்சியாகவே உள்ளதாக அந்த கேபிள் செய்தி கூறுகிறது

இதுகுறித்து அமெரிக்க தூதரக கேபிளில் கூறப்பட்டுள்ளதாவது,

டெல்லிக்கு அதிக அளவில் ஆயுதங்கள் கொடுக்க அமெரிக்கா பேரார்வமாக உள்ளது. இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்த முடியாமல் பிரச்சனை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அமெரிக்காவோ இந்திய படையின் குறிப்பாக கப்பற்படையின் செயல்திறனை புகழ்ந்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒப்பந்தங்களை எந்தவித பிரச்சனையும் இன்றி கையெழுத்திடச் செய்யும் திறன் பிரணாப் முகர்ஜிக்கு தான் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Wikileaks has exposed that US wanted Pranab Mukerjee as defence minister instead of AK Antony. Washington has even praised Pranab in the leaked US embassy cables. It feels that Antony is too slow in signing key bilateral military deals and also on other matters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X