For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடும் நிதி நெருக்கடி: உயர்கிறது ரயில் கட்டணம்!

By Shankar
Google Oneindia Tamil News

Railway
டெல்லி: கடும் நிதி நெருக்கடி காரணமாக பயணிகள் கட்டணத்தை 12 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மட்டுமல்லாது, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான செலவினங்களையும் கருத்தில்கொண்டே செய்யப்படுவதாக ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

8 ஆண்டுகளாக உயரவில்லை

மேலும் கடந்த 8 ஆண்டுகளாக பயணிகளின் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ள நிலையில், கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் என்று திட்டக் கமிஷன் மற்றும் ரயில்வே தொழிற் சங்கங்களிடமிருந்து தொடர்ச்சியாக கோரிக்கைகள் வந்தன.

அதே சமயம் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. கட்டணம் உயர்வு குறித்த ஆலோனை மட்டும்தான் நடக்கிறது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர்.

இதே காங்கிரஸ் அரசில், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த காலம் வரை, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாமலேயே, ரயில்வே நல்ல லாபம் ஈட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The Indian railways considering an 8-12% hike in passenger fares. The move comes as a desperate bid by the railways to pull itself out of the red and the hike could be across the board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X