For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹூஜி மெயில் காஷ்மீரிலிருந்து வந்தது கண்டுபிடிப்பு- 3 பேர் கைது

Google Oneindia Tamil News

delhi Bomb Blast
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு நாங்களே காரணம் என்று கூறி ஹர்கத் அல் ஜிஹாதி இஸ்லாமி (ஹூஜி) அமைப்பு அனுப்பிய இமெயில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரிலிருந்து அனுப்பப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இமெயில் அனுப்பப் பயன்பட்ட இன்டர்நெட் மையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை நடந்த பெரும் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தசம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சந்தேகப் பேர்வழிகளின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஹூஜி அமைப்பிடமிருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த மெயிலில், டெல்லி குண்டுவெடிப்புக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாக கூறியிருந்தனர். வழக்கமாக ஹூஜி அமைப்பு இதுபோல மெயில் அனுப்புவது கிடையாது என்பதால், இந்த மெயில் திசை திருப்பும் மெயிலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறியும் முயற்சியில் தேசிய புலனாய்வுப் படையினர் இறங்கினர்.

அதில் மெயில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட குளோபர் சைபர் கபே என்ற இன்டர்நெட் மையத்தின் உரிமையாளரைப் பிடித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் இறுதியில், உரிமையாளரான 28 வயதான மகமூத் அஜீஸ் காஜா, அவரது சகோதரர் காலித் ஹூசேன், பணியாளர் அஸ்வினி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த இன்டர்நெட் மையத்திற்கு 18 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்தான் இந்த மெயிலை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்கள் பலர் உள்ளனர். 2005ம் ஆண்டு அயோத்தியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமான நபர் கிஷ்த்வாரில்தான் போலீஸார் நடத்திய வேட்டையின்போது கொல்லப்பட்டார்.

இதன் காரணமாக கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். .

அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம் என்று முன்னதாக ஹூஜி மெயிலில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources say Delhi HC blast investigators have traced the email to the Kishtwar region of Jammu and Kashmir, but do not rule out yet that it could be a prank. The NIA is coordinating closely with its units in Jammu and Kashmir and the state police on this. The sources said the owner of a cyber cafe in Kishtwar is being questioned. They said they were looking into the possibility that a young man about 18 years old who frequented the cyber cafe sent the mail and were confident that he would be tracked down soon. The investigators are following these leads seriously as earlier attacks by the HuJI (B) were linked to Jammu and Kashmir. Also, the HuJI has links in Kishtwar; the mastermind of the 2005 Ayodhya attack was killed there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X