For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் கண்தானம் செய்து விட்டோம், மக்களும் செய்ய வேண்டும்-பிரதமர், மனைவி கோரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

Manmohan Singh with wife Gursharan Kaur
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது மனைவியும் தங்கள் கண்கனை தானம் செய்துள்ளனர். மேலும் மக்களையும் கண்தானம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று தேசிய கண்தான தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குருசரண் கௌர் ஆகியோர் இன்று தங்கள் கண்களை தானம் செய்ய உறுதியளித்து, அதுதொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

நம் நாட்டில் சுமார் 4. 5 மில்லியன் பேர் கண்பார்வையில்லாமல் தவித்து வருகின்றனர். இதில் கருவிழி மாற்று சிகிச்சை மூலம் 3 மில்லியன் பேருக்கு பார்வை கிடைக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக கண்தானம் செய்யுமாறு மக்களை ஊக்குவிக்கின்றனர்.

கண்தானம் செய்வதால் கருவிழிக்கோளாறால் பார்வையில்லாமல் இருப்பவர்கள் கண்ணிலும், வாழ்விலும் வெளிச்சம் வரும். 400-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கண்தான விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கண்தான முகாம்கள் நடத்தி வருகின்றன.

அருகில் உள்ள கண்வங்கிகளை தொடர்பு கொள்ள வசதியாக பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். மீட்டர் இல்லா 1919 சேவையை அளித்து வருகிறது.

English summary
National eye donation day is celebrated today. PM Manmohan Singh and his wife Gursharan Kaur have donated their eyes and asked the people to do so. They have signed the pledge form today. Out of the 4.5 million visually challenged people in the country, 3 million can gain sight through cornea transplant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X