For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொள்முதல் நிறுத்தம்: பாவூர்சத்திரத்தில் காய்கறி விலை திடீர் சரிவு

Google Oneindia Tamil News

பாவூர்சத்திரம்: கேரள கொள்முதல் நிறுத்தப்பட்டதால் பாவூர்சத்திரத்தில் காய்கறி விலை குறைந்தது.

கேரளாவில் நாளை (9-ம் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வந்தன. இதனால் கடந்த 4 தினங்களாக காய்கறி விலை உயர்ந்து வண்ணம் இருந்தது. இன்று ஓணம் பண்டிகை என்பதால் கேரள வியாபாரிகள் தங்கள் வியாபார கொள்முதலை நிறுத்திவிட்டனர். இதனையடுத்து காய்கறி விலை திடீரென சரிந்தது.

2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து ரூ.30க்கு கொள்முதல் செய்யப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் நேற்று ரூ.15 -க குறைந்தது.

இதுபோல் வெண்டைக்காய் ரூ.15-ல் இருந்து 9 ஆகவும், பீட்ரூட் ரூ.8-ல் இருந்து ரூ.5, முருங்கை ரூ.25-ல் இருந்து ரூ.15, மாங்காய் ரூ.55-ல் இருந்து ரூ.20, பல்லாரி ரூ.12-ல் இருந்து ரூ. 9 என அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ.10 முதல் 15 வரை குறைந்துள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி கேரள வியாபாரிகள் நேற்று முன்தினண் முதல் காய்கறி கொள்முதலை நிறுத்தியதால் உள்ளூர் விவசாயிகளிடம் காய்கறி கொள்முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இருப்பு உள்ள காய்கறிகளின் விலையும் குறைந்தது.

English summary
Vegetables prices have gone down in Pavursathiram as Kerala traders have stopped taking veggies from here. Vegetable prices were soaring in some parts of Tamil Nadu for the past 4 days ahead of Onam. Since Onam will be celebrated tomorrow, Kerala merchants have stopped taking vegetables from today. That's is why the prices have decreased.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X