For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் அணுஉலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்

Google Oneindia Tamil News

நிம்ஸ்: பிரான்ஸ் நாட்டு அணுஉலையில் ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள நிம்ஸ் என்ற நகரில் மார்கோயூல் பகுதியில் அணு மின்சார ஆய்வு மையம் உள்ளது. இங்குள்ள அணுகழிவு பராமரிப்பு நிலையத்தில்தான் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் ஒருவர் பலியாகியுள்ளார். 4 பேர் காயமடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து மூலம், அப்பகுதியில் அணுகதிர்வீச்சு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அஞ்சுப்படுகிறது.

ஆனால், இது குறித்து அணுஉலை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கதிர்வீச்சு எதுவும் இப்போது பரவவில்லை. அதைத் தடுக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அணுஉலையில் வெடிவிபத்து ஏற்பட்டு உண்மைதான் என்றனர்.

உலகலேயே அதிக அளவில் அணு உலைகளை வைத்திருப்பது பிரான்ஸ்தான். மேலும் உலகிலேயே அதிக அளவில் அணு மின்சாரத்தைப் பயன்படுத்துவதும் இந்த நாடுதான். பிரான்ஸில் மொத்தம் 58 அணு உலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The French nuclear safety body and local authorities say an explosion has rocked the Marcoule nuclear plant in southern France. In this explosion 1 died and 4 injured. Emergency services said there is a risk of a radioactive leak after an explosion in an oven at the Marcoule nuclear site.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X