For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களை திமுக குழு சந்திக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு சந்திக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பரமக்குடியில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்து மருத்துவமகைளில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவும் தி.மு.க. சார்பில் எம். எல்.ஏ.க்கள் குழு கழக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை, 15-ம் தேதி செல்கின்றனர்.

துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கிடவும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னை திரும்பினார் ஸ்டாலின்

இதற்கிடையே, சிகிச்சைக்காக லண்டன் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையில் சென்னை திரும்பினார்.அவருடன் மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன், பேரப்பிள்ளைகளும் திரும்பினர்.

English summary
M.K.Stalin led DMK team to meet the families of Paramakudi police firing victims, said DMK president Karunanidhi. He also announced Rs. 1 lakh solatium to be given to each of the families of the victims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X