For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: 6 பேர் பெண்கள்!

By Chakra
Google Oneindia Tamil News

Saidai Duraisamy
சென்னை: செ‌ன்னை மாநகரா‌ட்‌‌சி மேய‌ர் தேர்தலில் அதிமுக வே‌ட்பாளராக சைதை துரைசா‌மியும், மதுரை ‌மாநகரா‌ட்‌சி மேய‌‌ர் வே‌ட்பாள‌ராக வி‌.வி.ராஜ‌ன் செ‌ல்ல‌ப்பாவு‌ம் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கிறது.

இந் நிலையில் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

10ல் 6 மேயர் பதவிகளுக்கு பெண்கள்:

இதில் திருச்சி, நெல்லை,வேலூர், தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூருக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் விவரம்:

1. சென்னை - சைதை துரைசாமி
2. மதுரை - வி.வி.ராஜன் செல்லப்பா
3. திருச்சி - எம்.எஸ்.ஆர்.ஜெயா
4. சேலம் - சவுண்டப்பன்
5. கோவை - செ.ம.வேலுசாமி
6. நெல்லை - விஜிலா சத்தியானந்த்
7. வேலூர் - கார்த்தியாயிணி
8. ஈரோடு - மல்லிகா பரமசிவம்
9. திருப்பூர் - திருப்பூர் ஆர்.விசாலாட்சி
10. தூத்துக்குடி - எல்.சசிகலா புஷ்பா

சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சைதை துரைசாமி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சைதை துரைசாமி, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இவர் நடத்தி வரும் மனித நேய அறக்கட்டளையில் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் படித்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஐஏஎஸ் தேர்வில் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை தேர்தல் தேதி அறிவிப்பு?:

இந் நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் நடைபெறும் நாளில் இருந்து 20 நாட்களுக்கு முன் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அக்டோபர் 19ம் தேதிக்குள் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதன்படி வரும் 25ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தமிழக அரசின் இலவச திட்டங்கள் தொடங்கப்பட்ட பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா நேற்று இலவச ஆடு, மாடு, லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டார்.

இன்று வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார். இதனால் நாளை அல்லது 19ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Saidai Duraisamy is announced as a ADMK candidate for Chennai Mayor post by party chief and CM Jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X