For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி சான்றிதழ் கொடுத்தாரா மிஸ் யுனிவர்ஸ் லைலா?

By Siva
Google Oneindia Tamil News

Leila Lopes
வாஷிங்டன்: பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அங்கோலா நாட்டு அழகி லைலா லோபஸ் போட்டியில் கலந்துகொள்ள போலிச் சான்றிதழ் சமர்பித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

அண்மையில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் அங்கோலாவைச் சேர்ந்த லைலா லோபஸ் (25) பட்டத்தை தட்டிச் சென்றார். அவர் இங்கிலாந்தில் நடந்த தகுதிச் சுற்றில் கலந்துகொள்வதற்காக போலியான கல்விச் சான்றிதழ் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

லைலா அங்கோலாவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். ஆனால் இங்கிலாந்தில் வாழும் அங்கோலா நாட்டவருக்கான அழகிப் போட்டியில் லைலா கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்று அர்ஜென்டினா நாளிதழில் செய்தி வெளியானது. சார்லஸ் முகானோ என்பவர் தான் லைலா இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதாக போலிச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்துள்ளார்.

மேலும் இங்கிலாந்தில் நடந்த தகுதிச் சுற்றில் லைலாவை தேர்ந்தெடுப்பதற்காக முகானோ லஞ்சம் கொடுத்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பிரபஞ்ச அழகி போட்டி நடத்தும் அதிகாரிகளும், லைலாவும் மறுத்துள்ளனர்.

அங்கோலாவில் இருந்து முதன்முதலாக பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லைலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Miss Universe Leila Lopes is accused of submitting fake documents in the qualifying round in England. But the Miss Universe officials and Leila have denied this accusation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X