For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு மாவட்டத்தில் ராணுவ முகாமுக்கு தேர்தல் ஆணையம் தடை

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ராணுவ முகாமுக்கு மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது குறித்து, மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வருகின்றது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அக்டோபர் 17 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஈரோட்டில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமிற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகின்றது.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்குப் பிறகு இந்த நடவடிக்கைய மேற்கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

English summary
TN State EC has baned an Army camp in Erode siting Local body polls. The army officials are informed that they can conduct their camp after the poll ends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X