For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரைத்தாலும் ஒபாமா செக்ஸி: மிஷல்

By Siva
Google Oneindia Tamil News

Obama and his wife
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் தலையில் அதிக அளவில் நரை தென்படுகிறது. ஆனால் நரைத்தாலும் கூட ஒபாமா செக்ஸியாகத் தான் இருக்கிறார் என்று மிஷல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அண்மைக் காலமாக அவர் தலையில் நரை முடி அதிகரித்து வருகிறது. வாஷிங்டனில் நடந்த விருந்து ஒன்றில் பேசிய மிஷல் ஒபாமா கூறியதாவது,

வெள்ளை மாளிகைக்கு வந்த பிறகு ஒபாமா எப்படி மாறியிருக்கிறார் என்று என்னைக் கேட்கிறார்கள். அவர் தலையில் நரை அதிகமாவதைத் தவிர எனக்கு வேறு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் அது கூட செக்ஸியாகத் தான் உள்ளது என்றார்.

உடனே அருகில் நின்று கொண்டிருந்த ஒபாமா தன் மனைவிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மிஷல் நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே போகிறார் என்றார். மிஷல் ஒரு அற்புதமான பெண். அதனால் தான் எனக்கு அற்புதமான குழந்தைகள் கிடைத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவி்த்தார்.

English summary
US first lady finds her hubby's grey hair as sexy. Obama in turn finds his wife growing cute every day. The first couple of US praised each other at a fundraising party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X