For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

300 புள்ளிகளுக்கு மேல் சரிவு... 16000க்கும் கீழே போனது சென்செக்ஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

மும்பை: உலகப் பங்குச் சந்தைகள், குறிப்பாக ஆசிய சந்தைகளில் நிலவும் மோசமான சூழலில் இன்றும் இந்தியாவின் சென்செக்ஸ் மற்றும் நிப்டியை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

இன்றைய வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸில் 300 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது.

ஐரோப்பாவில் தொடரும் நிதி நெருக்கடியே, இந்த சரிவுக்கான முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவலித்துள்ளனர்.

ரிலையன்ஸ், ஐடிசி, எச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், எல் அண்ட் டி, எஸ்பீஐ போன்றவற்றின் பங்குகள் கணிசமான விலைச் சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தை நிப்டியில், ஒன்றுக்கு ஏழு எனும் விகிதத்தில் பங்குகள் சரிந்தன. கிட்டத்தட்ட 100 புள்ளிகளை இழந்துள்ளது நிப்டி.

இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த சில தினங்களுக்குள சென்செக்ஸ் 14000 புள்ளிகளுக்கு வந்துவிடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பிற்பகம் நிலவரம்: சென்செக்ஸ்: 15,843 (இழப்பு 318 புள்ளிகள்), நிப்டி: 4,771. (இழப்பு 97 புள்ளிகள்)

English summary
The slide in market accelerated as global cues worsened. Likely recession in European continent triggered panic selling from investors. The 30-share BSE Sensex plunged 318 points to 15,843 and the 50-share NSE Nifty lost 97 points to 4,771.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X