For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அசன் அலி கறுப்புப் பண பதுக்கல்: 4 நாடுகளில் தனிப்படை விசாரணை

By Shankar
Google Oneindia Tamil News

Hasan ali
டெல்லி: அசன் அலியின் பல்லாயிரம் கோடி கறுப்புப் பணபதுக்கலை கண்டறிய தனிப்படை அமைத்துள்ளது அமலாக்கப்பிரிவு. இந்தத் தனிப்படை, சிங்கப்பூர், சுவிஸ் உள்ளிட்ட 4 நாடுகளில் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது.

மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த தொழில் அதிபர் அசன் அலிகான். இவர் வெளிநாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடி பணம் பதுக்கி வைத்திருப்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஹவாலா தடுப்பு சட்டத்தின் கீழ், அசன் அலி புனேயில் கைது செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றம் தலையிட்டதன் பேரில் அசன் அலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணையில் அவர் பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன் ஆகிய 4 நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தவிருப்பதாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.

English summary
The Enforcement Directorate’s (ED) investigation into the financial transactions of Pune businessman Hasan Ali Khan, who is behind bars for alleged money laundering and tax evasion, is going global. Four ED teams will be dispatched to Switzerland, Singapore, the United Arab Emirates
 (UAE) and the United Kingdom (UK) in a month to investigate Khan’s dealings and back accounts there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X