For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி உரிம நடைமுறை தொடர்பான அமைச்சரவை முடிவை மாற்ற சிதம்பரம் முயலவில்லை- குர்ஷித்

Google Oneindia Tamil News

Salman Khurshid
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பான அமைச்சரவையின் முடிவை மாற்ற அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முயலவில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்கு, முதலில் வருவோருக்கே முதலில் உரிமம் என்ற நடைமுறையை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை முடிவு செய்த போதும் கூட, அந்த முடிவை சிதம்பரம் மாற்ற முயலவில்லை. அதேசமயம், அவர் தொடர்ந்து ஏல நடைமுறையேயே ஆதரித்தார். தனது முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்த போதிலும், அமைச்சரவை ஒரு முடிவை எடுத்த பின்னர் அதை மாற்ற அவர் எந்தவகையிலும் முயலவில்லை.

அமைச்சரவை ஒரு முடிவை எடுத்த பின்னர் அதை யாரும் மாற்ற முடியாது. அதற்கு ப.சிதம்பரமும் விதி விலக்கல்ல. அவர் எந்த வகையிலும் அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்படவில்லை.

2ஜி விவகாரம் தொடர்பான மத்திய நிதியமைச்சக கடிதம் தொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மைதான் என்றார் குர்ஷித்.

English summary
Admitting that finance minister Pranab Mukherjee and P Chidambaram had a "working difference" on the controversial 2G note issue, law minister Salman Khurshid has defended the home minister on the first come first serve policy for issuing spectrum licences saying he could not have changed a Cabinet decision. "Chidambaram, even after the Cabinet decision, continued to argue for auction," Khurshid said, adding that Chidambaram, who was then finance minister, could not change the policy as it was a Cabinet decision. "Could Chidambaram alone have overturned the Cabinet decision? What was the other way for market determination once the Cabinet had decided against auction," he told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X