For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்!

Google Oneindia Tamil News

Kalyanasundaram
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சர் பி.எம். கல்யாண சுந்தரம், இப்போதுதான் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளார். அதுவும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதால் அதை எதிர்த்து காங்கிரஸார் போராட்டம் நடத்தியுள்ளனர்.

என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் ரங்கசாமி அமைச்சரவையில் போக்குவரத்து, கல்வி அமைச்சராக உள்ளார். இவர் பத்தாம் வகுப்பைக் கூட முடிக்காதவர். கடந்த 1991ல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய இவர், அறிவியல், சோஷியல் சயின்ஸ் ஆகிய இரு பாடங்களிலும் தோல்வியுற்றார்.

தற்போது அமைச்சராகி விட்ட நிலையில் பத்தாம் வகுப்பை எப்படியாவது பூர்த்தி செய்ய விரும்பி தனித் தேர்வராக விண்ணப்பித்தார். அவருக்குத் திண்டிவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் மையம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு அவருக்குப் பதில் அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் பரீட்சை எழுதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கல்யாண சுந்தரம் ஆள் மாறாட்டம் செய்து வி்டடதாக சர்ச்சை எழுந்துள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு காங்கிரஸார், கிழக்குக் கடற்கரைச் சாலையில் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய அமைச்சரால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது.

தமிழக கல்வித்துறை விசாரணை

இதற்கிடையே அமைச்சர் ஆள் வைத்து தேர்வு எழுதயி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்துப் புகார் வந்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

ஆனால் தன் மீதான புகார்களை கல்யாண சுந்தரம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது பொய்யான புகார். என்னுடைய வளர்ச்சியைப் பொறுக்காமல் எதிர்க்கட்சியினர் இந்த அவதூறை சுமத்தி வருகின்றனர். நான்தான் தேர்வு எழுதினேன். இதுதொடர்பாக எந்த விசாரணை நடந்தாலும் அதை சந்திக்க நான் தயார் என்று கூறியுள்ளார் கல்யாண சுந்தரம்.

புதுவையில் என். ஆர் காங்கிரஸும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தல் முடிந்ததுமே கூட்டணி நொறுங்கிப் போய் விட்டது. அன்று முதல் இன்று வரை புதுச்சேரி அதிமுகவினர், ரங்கசாமி கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கல்யாண சுந்தரம் விவகாரம் புதுச்சேரி அதிமுகவினருக்குப் புதிய ஆயுதமாக வந்து அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதை வைத்து ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி புதுவை அதிமுக தயாராகி வருகிறது.

English summary
Puducherry education minister P M L Kalyanasundaram, who claimed to have sat for the Class X supplementary exam, is now under a cloud. Taking notice of complaints that the minister had used a proxy to write his exam, the Tamil Nadu education department has ordered a probe, threatening to use handwriting experts to confirm if the minister actually wrote the test. Kalayansundaram, a school dropout, decided to complete his Class X and XII exams along with an open university degree course, after he became education minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X