For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானப்படையினர் தவறாக குண்டு வீசியதில் 30 ராணுவ வீரர்கள் பலி

Google Oneindia Tamil News

சனா: ஏமன் நாட்டில் அந்த நாட்டு விமானப் படையினர் தவறாக, தங்களது ராணுவ முகாமின்மீது குண்டு வீசியதில் அதில் இருந்த 30 வீரர்கள் பலியாகி விட்டனர்.

தெற்கு அபியான் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு பள்ளியில் ராணுவத்தின் 119வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தங்கியுள்ளனர். அந்தப் பள்ளி தற்போது செயல்படவில்லை. இங்கிருந்தபடி தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள ஜின்ஜிபாரில் அல் கொய்தா தீவிரவாதிகள் கொட்டத்தை அடக்குவதற்காக விமானப்படையினர் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தவறுதலாக ராணுவத்தினர் தங்கியிருந்த பள்ளி மீது குண்டு வீசப்பட்டது. இதில் சிக்கி 30 ராணுவத்தினர் உயிரிழந்து போயினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

English summary
A government warplane has mistakenly bombed an army position in southern Yemen, killing at least 30 soldiers and wounding many more, military and medical officials said on Sunday. The officials said the bombing, which took place on Saturday evening in the southern Abyan province, targeted an abandoned school used as shelter by soldiers of the army's 119th Brigade. The school is located just east of Abyan's provincial capital Zinjibar, where militants linked to Al Qaeda have been in control since May.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X