For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை அருகே காங்கிரஸ் வேட்பாளர் பலி: தேர்தல் ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

கோவை: கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விபத்தில் பலியானதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம்(70). கருமத்தம்பட்டி நகர காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். 2 முறை கருமத்தம்பட்டி பேரூராட்சி கவுன்சிலராக பதவி வகித்த இவர், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், இவர் சோமனூர்- ராமாச்சியம்பாளையம் சாலையில் டூவீலரில் சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதி, பலத்த காயமடைந்தார். இதையடுத்து, சிகிச்சைச்சாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரணியம் இறந்தார்.

இது குறித்து, கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார். இந்நிலையில், வேட்பாளர் இறந்ததால், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
Congress candidate for Karumathampatti panchayat president post died in a road accident. State election commission has postponed the polls here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X