For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஏர்போர்ட்டுக்கு 'ஏரோபிளேன்' பார்க்க வந்த கரப்பான்கள்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வி்மான நிலையத்தின் உள்நாட்டு பயணிகள் முனையம் அருகே உள்ள சாக்கடையிலிருந்து கரப்பான் பூச்சிகள் திடீரென படையெடுத்து வரவே, பயணிகள் முகம் சுளித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை வி்மான நிலையத்தின் உள்நாட்டு பயணிகள் முனையத்திற்கு நேற்று கரப்பான் பூச்சிகள் திடீரென படையெடுத்தன. இங்கும், அங்குமாக அவை நகர்ந்தும், பறந்தும் பயணிகளை அவதிக்குள்ளாக்கின.

இந்தக் கூத்து சுமார் 1 மணி நேரம் நடந்ததாக பயணி ஒருவர் தெரிவித்தார். பின்னர் வந்து சேர்ந்த விமான நிலைய பராமரிப்பு பணியாளர்கள் தரையில் தண்ணீர் ஊற்றியும், ஸ்பிரே அடித்தும் கரப்பான்களை அழித்தனர்.

சர்வதேச நகரான சென்னையில், சர்வதேச விமான நிலையத்தில் இப்படி ஒரு கரப்பான் பூச்சி தொல்லையா என்று பயணிகள் அதிருப்தியில் புலம்பினர். வெளிநாட்டுக் காரங்க பார்த்தா என்ன நினைப்பாங்க என்று பலரும் கவுண்டமணி ஸ்டைலில் அலுத்துக் கொண்டனர்.

இது குறித்து சென்னை விமான நிலைய தலைவர் ஈ.பி. ஹரீந்திரநாதன் கூறியதாவது,

இங்கு கட்டிட வேலை நடப்பதாலும், நேற்று கனமழை பெய்ததாலும் தான் கரப்பான்கள் தொல்லை ஏற்பட்டது. கட்டிட பணிகளால் விமான நிலைய பராமரிப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன என்றார்.

ஆனால் விமான நிலைய வளாகத்தி்ல தண்ணீர் தேங்கி சாக்கடை போல மாறியுள்ளதால்தான் அங்கிருந்து கரப்பான் பூச்சிகள் படையெடுத்து உள்ளே வந்து விட்டதாக பயணிகள் கூறுகிறார்கள்.

English summary
Cockroaches invaded Chennai Airport's domestic terminal yesterday and made the passengers run here and there. Passengers were unhappy about the poor maintennace of the airport while the director blamed heavy downpour and construcion work as the reasons for this menace.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X