For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்போஸிஸ் காலாண்டு லாபம் 9.72 சதவீதம் உயர்வு!

By Shankar
Google Oneindia Tamil News

Infosys
மும்பை: ஐடி துறையின் முன்னணி நிறுவனமான இன்போஸிஸின் காலாண்டு லாபம் 9.72 சதவீதம் உயர்ந்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனம் ரூ 1902 லாபம் ஈட்டியுள்ளது.

வரிகள் செலுத்தியது போக நிகர லாபமாக ரூ 1737 கோடியை ஈட்டியுள்ளதாக இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்துள்ளது.

நிறுவனத்தின் வருவாயைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ 8099 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 6947 கோடியாக இருந்தது.

அடுத்த காலாண்டு முடியும்போது வருவாய் ரூ 9,012 ஆக உயரும் என நிறுவனம் எதிர்ப்பார்க்கிறது.

ஆண்டு வருவாயைப் பொறுத்தவரை, வரும் மார்ச் 2012-ல் ரூ 34,088 ஆக வருவாய் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இன்போஸிஸ் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஷிபுலால் கூறுகையில், "உலகளாவிய பேரியல் பொருளாதார நடவடிக்கைகளில் இன்னும் நிச்சயமற்ற நிலைதான் உள்ளது. எனவே நிறுவனங்கள் புதிய வருவாய் வாய்ப்புகளைத் தேடுவதால், ஐடி நிறுவனங்களின் வருவாய் உயர்ந்துள்ளது," என்றார்.

இந்த காலாண்டில் மட்டும் புதிதாக 45 வாடிக்கையர்களை இன்போஸிஸ் பெற்றுள்ளது. 15,352 புதிய பணியாளர்களைப் பெற்றுள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த மூன்றாம் காலாண்டில் மொத்தம் 1,41,822 பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.

English summary
IT bellwether Infosys on Wednesday reported a 9.72 per cent growth in its consolidated net profit to Rs 1,906 crore for the second quarter ended September 30. The company had posted a net profit of Rs 1,737 crore for the September quarter of the previous fiscal (2010-11), Infosys said in a filing to the Bombay Stock Exchange.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X