For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.எஸ்.எல்.வி-சி 18 வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது: 4 செயற்கைக் கோள்களை ஏவியது

Google Oneindia Tamil News

PSLV Lift Off
சென்னை: இந்தியாவின் பி.எஸ்.எல்.வி -சி 18 ராக்கெட் இன்று காலை 11 மணியளவில் விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது.

வளிமண்டலம் மற்றும் பருவநிலை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட இந்தியா-பிரான்ஸ் இணைந்து தயாரித்த Megha-Tropiques செயற்கை கோள் உட்பட 4 செயற்கை கோள்களை பி.எஸ்.எல்.வி -சி18 இன்று விண்ணில் ஏவியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டின் கவுண்டவுன் 50 மணி நேரத்திற்கு முன் துவக்கப்பட்டது.

இறுதிக்கட்ட சோதனைகள் முடிந்து இன்று காலை 11 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. 4 கட்ட எரிபொருள்களுடன் தனது பயணத்தை தொடர்ந்த ராக்கெட் எடுத்து சென்ற 4 செயற்கை கோள்களையும், சரியாக பாதையில் விட்டது.

Megha-Tropiques செயற்கை கோள் 867 கி.மீ. உயரத்தில் பூமியை சுற்றி வரும். இதனுடன் 10 கிலோ எடை கொண்ட எஸ்.ஆர்.எம்.சாட் என்ற மற்றொரு செயற்கை கோளும் விண்ணில் செலுப்படுகிறது. இது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நானோ செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் கார்பன் டை ஆக்சைடை கண்காணிப்பதன் மூலம் புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும்.

இவை தவிர கப்பல் போக்குவரத்திற்கு உதவும் வகையில் 28.7 கிலோ எடை கொண்ட செயற்கை கோளான செஸ்சல்சாட்-1, கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ எடை கொண்ட ஜிக்னு என்ற நானே செயற்கை கோளும் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.

English summary
The Polar Satellite Launch Vehicle - C18 (PSLV-C18) blast off from here at 11.00 am. Till date, 48 of PSLV's 49 satellites launched have been successful. The rocket is carrying the 1,000-kg Megha Tropiques and three smaller satellites together weighing 42.6 kg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X