For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் கிராமங்களில் கருப்புக் கொடி போராட்டம்- விசாரணைக்குச் செல்ல நீதிபதி சம்பத் தயக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து இரண்டாவது முறையாக விசாரணை நடத்தச் சென்ற நீதிபதி சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காக்கநேந்தல் கிராமத்தில் கறுப்புக்கொடி ஏற்பட்டது. இதனால் நீதிபதி சம்பத் விசாரணைக்கு செல்லாமல் ராமநாதபுரத்திலேயே தங்கி விட்டார்.

செப்டம்பர் 11-தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜையின் போது பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர். இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியதை அடுத்து தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஒருநபர் விசாரனைக் கமிஷனை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு குறித்து விசாரனை நடத்துவதற்காக இரண்டாம் முறையாக நீதிபதி சம்பத் ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலேசானை நடத்திய அவர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட காக்கநேந்தல், மஞ்சூர் மற்றும் பல்லவராயநேந்தல் கிராமங்களில் விசாரனை நடத்த முடிவு செய்திருந்தார்.

விசாரணைக்காக நீதிபதி வரப்போவதை அறிந்து காக்கநேந்தல் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். நீதிபத் சம்பத் விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நீதிபதி சம்பத் ராமநாதபுரத்திலேயே தங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரனை நடத்த கடந்த சில வாரங்களுக்கு முன் நீதிபதி சம்பத் பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்றபோது சில கிராமங்களில் அவருக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. இதனையடுத்து அவர் விசாரனையை பாதியிலேயே முடித்துக்கொண்டு மதுரை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kakkanenthal villagers hoisted black flags against Justice Sampath, who is probing the Paramakudi police firing on Dalits. This is the second time the villagers preotesting against Justice Sampath. After the protest Justice Sampath cancelled his visit and is staying in Ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X