For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் விமான சாகசத்தில் விபத்து: விமானி பலி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: விமான சாகச நிகழ்ச்சியில் போர் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானி ஒருவர் பலியானார்.

சீன நாட்டின் ஷியன் ஷான்சி மாகாணத்தில் புசெங் பகுதியில் உள்ள நெய்யூ விமான நிலையத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜெ.எச்.7 குண்டெறியும் போர் விமான வகையை சேர்ந்த விமான ஒன்று வானில் சாகசத்திற்காக பறந்தது. இதில் 2 விமானிகள் இருந்தனர்.

விமான மேலே பறந்த சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுபாட்டை இழந்தது. 2 கி.மீ. மட்டுமே பயணித்த விமான ஏடாகூடமாக பறந்தது. இதையடுத்து இதில் இருந்த விமானி ஒருவர் தற்காப்பு பராசூட் மூலம் குதித்தார். மற்றொருக்கு பாராசூட் இல்லாததால் அவர் குதிக்கவில்லை என நம்பப்படுகிறது.

ஆனால் சிறிது நேரத்தில் விமானம் நேராக கீழே வந்து நிலத்தை தலைகீழாக வந்து விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த விமானி பலியானதாக, விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாராசூட்டில் குதித்த விமானிகள் உடல் முழுவதும் காயங்களோடு, சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 2004ம் ஆண்டு முதல் சீன விமானப் படையி்ல் பயன்படுத்தப்படும் ஜெ.எச்-7 வகையை சேர்ந்த 100க்கும் விமானங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. அவற்றில் கடந்த 2009ம் நடந்த சீன-ரஷ்ய நாட்டு கூட்டு பயிற்சியின் போது விபத்திற்குள்ளானது. இதில் 2 விமானிகளும் பலியாகினர்.

English summary
A pilot died after an air force jet nose-dived and crashed at an air show. 2 seater JH-7 "Flying Leopard" fighter-bomber, burst into flames upon crashing. The other pilot's seat appeared not to have ejected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X