For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் நிலைய உணவகத்தில் சாப்பிட்ட 13 பேர் உடல் நிலை பாதிப்பு- ஒருவர் பலி

By Chakra
Google Oneindia Tamil News

Train
சென்னை: உத்தரப் பிரதேசத்தில் ரயில் நிலையத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவு சாப்பிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அதில் ஒருவர் பலியாகிவிட்டார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தலைமையில் 15 பேர் காசி யாத்திரை சென்றனர். கடந்த 6ம் தேதி இவர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். 10ம் தேதி பாவாடை (45) என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார்.

இதையடுத்து காசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 12ம் தேதி சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்கள் சென்னை திரும்பினர்.

வழியிலேயே பலருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. இதில் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட பாவாடை பலியாகிவிட்டார்.

உடல்நலம் பாதித்த 13 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பலியான பாவாடையின் தாயார் கூறுகையில், உத்தரப் பிரதேச மாநிலம் மொகல்சராய் ரயில் நிலையத்தில் சாம்பார் சாதம் வாங்கி சாப்பிட்ட பின்னர் தான் அனைவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது என்றார்.

English summary
Thirteen passengers on the way to Varanasi from Villupuram allegedly suffered from food poisoning after having food from Mughalsarai railway station. One of the sick passenger died on the way back home town
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X