For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தி.மு.க.வினர் துரோகம் செய்தால் டிஸ்மிஸ்: கே.என்.நேரு

Google Oneindia Tamil News

KN Nehru
திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம் உறுதி என மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, திருச்சி மாவட்ட தி.மு.க.செயலாளரும் திருச்சி முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் 12,19,28 ஆகிய 3 வார்டுகள் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், 13வது வார்டு மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு, அதில் அவர்களது விருப்பத்திற்கு உரிய சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

மீதமுள்ள 61 இடங்களிலும் தி.மு.க.வினர் போட்டியிடுவது முடிவு செய்து அதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில பகுதிகளில் தி.மு.க.வேட்பாளர்களை எதிர்த்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும், சுயேட்சையாக போட்டியிடுவதாகவும், அதற்கு தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பணியாற்றி அவர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

மாறாக, தொடர்ந்து கழகத்திற்கும், கூட்டணி கட்சியினருக்கும் எதிராக பணியாற்றினால் அவர்கள் அனைவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனே நீக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK leader K.N.Nehru has warned the party workers that, No one from party should act against the DMK and alliance party candidates of local body election. The persons who are contesting against party decisions, will be sacked from the party, he warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X