For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் மக்களிடையே பிரதமர் கிலானிக்கு செல்வாக்கு குறைகிறது

Google Oneindia Tamil News

லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு குறைந்து வருவதாக, அந்நாட்டில் எடுக்கப்பட்ட சமீபகால கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அரசியல்வாதிகளுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு குறித்து அறியும் வகையில், கால் ஆப் பாகிஸ்தான் என்ற அமைப்பு பொதுமக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், அரசியல்வாதிகளின் செல்வாக்கு ஏற்ற இறக்கம் அடைந்து இருப்பது தெரிந்தது.

மேலும் மூட்டாஹிதா கியூமி இயக்கத்தின் தலைவர் அல்டாப் உசேன், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கியூ பிரிவு தலைவர் சுஜார் ஆகியோரின் செல்வாக்கும், மக்களிடையே வெகுவாக குறைந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் யூசப்ராசா கிலானியின் -29 புள்ளிகளை பெற்று, மக்களிடையே செல்வாக்கு குறைந்து காணப்பட்டார். ஆனால், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் செரீப், அவரது தம்பி ஷாபாஷ் செரீப் ஆகியோரின் மதிப்பு உயர்ந்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி ஆகியோருக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது.

English summary
Pakistan PM Gilani, Muttahida Quami Movement chief Altaf hussain, Pakistan Muslim league leader Sujar are loosing their people influence, a survey said. But the former cricket captain Imran khan and opposition party leader Nawaz Sharif had high influence in Pakistan says the survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X