For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயர் வகுப்பு ரயில் கட்டணம் உயர்கிறது!

By Chakra
Google Oneindia Tamil News

Train
டெல்லி: கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்துவதன் முதல் கட்டமாக, உயர் வகுப்புப் பிரிவு பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் சரக்குக் கட்டணத்தை ரயில்வே துறை 6 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் நிதிப்பிரச்னை காரணமாக பயணிகள் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாகக் கட்டணங்களை ரயில்வே துறை உயர்த்தவில்லை. இந்நிலையில் திட்டக் கமிஷனின் ஆலோசனைப்படி தற்போது கட்டணங்களை உயர்த்தத் தீர்மானித்துள்ளது. ஏழை மக்களால் கட்டண உயர்வைத் தாங்க இயலாது. எனவே அவர்களை பாதிக்காத வகையிலும், கட்டணங்களைச் சீரமைக்கும் விதமாகவும் இந்த உயர்வு இருக்கும்.

வரும் ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பாகவே கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது. கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில், ரயில்வே துறைக்குத் தேவைப்படும் நிதியை மத்திய நிதி தொகுப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவை.

ஆனால் பயணக் கட்டணத்தை உயர்த்த அவ்வாறு அனுமதி பெறத் தேவையில்லை. எனவே முதல்கட்டமாக உயர்வகுப்புப் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிதித்துறை ஆணையர் பூம்பா பப்பர் தெரிவித்தார்.

English summary
After the recent hike in freight rates by six per cent, upper class train journey may also become costly with the Railways finalizing plan to rationalize passenger fares to tide over its financial problems. “We are trying to see how not to burden the poor people and how not going for massive hike, perhaps something here and there,” Railway Finance Commissioner Pompa Babbar told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X