For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார் கமல்நாத்

Google Oneindia Tamil News

Metro Train
பெங்களூர்: பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவையை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத், எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்தை முறைப்படி இன்று தொடங்கி வைத்தார்.

2007ம் ஆண்டு பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் பணிகளைத் தொடங்கியது. மார்ச் 2011ல் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து பையப்பனஹள்ளி முதல் எம்.ஜி.ரோடு வரையிலான பாதையில் இன்று போக்குவரத்துத் தொடங்கியுள்ளது. இந்த சேவையை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத் மற்றும் கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா ஆகியோர் கொடியைசத்து துவக்கி வைத்தனர்.

மொத்தம் நான்கு பாதைகளில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. பெங்களூர் நகரில் முதல் கட்டத்தில்42.3 கிலோமீட்டர்தொலைவுக்கு இரு வழிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. இதில் 8.8 கிலோமீட்டர் அளவுக்கு பூமிக்குக் கீழே ரயில் செல்லும். மொத்தம் 41 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் சேவை இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது. அதனை மத்திய அமைச்சர் கமல்நாத் துவக்கி வைக்கிறார். மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10 , அதிகபட்ச கட்டணம் ரூ. 15. இந்த குறைந்த கட்டணத்தால் பெங்களூர்வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது.

English summary
Union Urban Development Minister Kamal Nath and Karnataka CM have flagged off the inaugural run of the metro train service in Bangalore today. Kamal Nath will kick start the passenger service by 4 pm today. With fares of Rs 15 and Rs 10 for the journey across the six stations, the fact that the tickets are not heavy on the pockets is also a welcome change from the autorickshaws that ply on Bangalore roads fleecing passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X