For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா வெற்றி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மேயர் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா வெற்றி பெற்று மேயராகியுள்ளார்.

இங்கு நடந்த மேயர் தேர்தலில் சசிகலா புஷ்பாவுக்கு 65,050 வாக்குகள் கிடைத்தன. திமுக வேட்பாளர் பொன். இனிதாவுக்கு 41,294 வாக்குகள் கிடைத்தன.

மதிமுக வேட்பாளர் பாத்திமா 29,336 வாக்குககளை அள்ளி 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 4வது இடத்தைப் பிடித்த தேமுதிகவுக்கு 7407 ஓட்டுக்களே கிடைத்தன.

தூத்துக்குடி நகராட்சி 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சித் தலைவராக இருந்த கஸ்தூரி தங்கம் மேயராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் மாநகராட்சியான பின்னர் நடந்துள்ள முதல் தேர்தல் இது. இதன் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சசிகலா புஷ்பா.

English summary
ADMK candidate Sasikala Pushpa has won Mayoral post in Tuticorin. She got 65,050 votes, DMK's Pon.Initha has got 41,294 votes. MDMK got 3rd place and DMDK pushed to 4th place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X