காணாமல் போன புதுவை அமைச்சரைக் கண்டுபிடித்தால் பரிசு தருவதாக அதிமுக அறிவிப்பு

ஏற்கனவே காணவில்லை என்ற தலைப்பில் கல்யாணசுந்தரத்தைக் காணவில்லை என்று கூறி புதுவை இளைஞர் காங்கிரஸார் போஸ்டரும், துண்டுப் பிரசுரமும் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் பரிசு தருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் கூறுகையில்,
புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க. சார்பில் மனு அனுப்பப்பட்டது. இதில் 15 நாட்களாகியும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு யாராக இருந்தாலும் ரூ 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
மாறாக இந்த பிரச்சினையை பயன்படுத்தி முதல்வர் ரங்கசாமியை சமரசம் செய்து ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஒரு அமைச்சரை காப்பாற்ற ஒட்டு மொத்த அரசும் செயல்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதி பெற்று அ.தி.மு.க. சார்பில் இதற்காக போராட்டம் நடத்துவோம் என்றார் அன்பழகன்.
'குட்டியூண்டு' மாநிலமான புதுச்சேரியில், கல்யாணசுந்தரம் எங்கு போய் தலைமறைவாக இருப்பார் என்பது மிகப் பெரிய வியப்பாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications