For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகிழ்ச்சி கலந்த கவலையோடு இன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பும் கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: தனது மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு டெல்லியில் முகாமிட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை திரும்புகிறார்.

கடந்த 21ம் தேதி தனது துணைவி ராஜாத்தி அம்மாள், பேரன் ஆதித்யா ஆகியோரோடு டெல்லி சென்ற கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் திகார் சிறைக்குச் சென்று மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

இந் நிலையில் ஜாமீன் கோரி கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, இவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

இதனால் திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. கனிமொழிக்கு நேற்றே ஜாமீன் கிடைத்துவிடும் என நம்பியது. இந்த நம்பிக்கையோடு தான் கருணாநிதியுடம் டெல்லியிலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்.

ஆனால், ஜாமீன் மனு மீதான அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இதன் மீதான தீர்ப்பை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார். இதனால் திமுக தரப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

நாளை முதல் நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறைகள் ஆரம்பிக்கவுள்ளதால் அதற்கு முன் தீர்ப்பு வந்துவிடும் என நினைத்த நிலையில், தீர்ப்பை விடுமுறைகளுக்குப் பின் அடுத்த மாதத்துக்கு நீதிபதி தள்ளி வைத்ததால் கருணாநிதி பெரும் கவலை அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் இந்தப் பயணத்தின் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருடனான நட்பு புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியும், கனிமொழிக்கு ஜாமீன் தரலாம் என சிபிஐயின் வாதமும் கருணாநிதிக்கு நிம்மதியையும் தந்துள்ளது.

இதனால் கவலை கலந்த மகிழ்ச்சியோடு இன்றே அவர் சென்னை திரும்புகிறார். அவருடன் ராஜாத்தி அம்மாளும் சென்னை திரும்புகிறார்.

English summary
While the CBI’s submission that it has no objection to Kanimozhi’s bail plea came as a relief to DMK president Karunanidhi, he was disappointed when the special court reserved its order on her bail application for November 3. Karunanidhi, who had prolonged his stay here in the hope that Kanimozhi would be released on bail on Monday, has now decided to return to Chennai today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X