For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் வரத்து அதிகரிப்பால் நெல் விலை வீழ்ச்சி

Google Oneindia Tamil News

Paddy
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டத்தில் நெல் வரத்து அதிகரிப்பு மற்றும் மழையால் நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பை, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கடையம் போன்ற பகுதிகளில் அறுவடை நடந்து வருவதால் பாவூர்சத்திரம் பகுதியில் தினசரி 2 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் விலையும் குறைந்து வருகிறது. அம்பை 16 ரகம் 500 ரூபாயாக விலை குறைந்துள்ளது. அதிக வரத்து மற்றும் மழையால் ஈரபதம் ஏற்பட்டுள்ளதுமே விலை குறைவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

நெல் விலை சரிவைத் தொடர்ந்து 1650 ரூபாய்க்கு விற்ற அம்பை 16 ரக பச்சரிசி தற்போது 1400 ரூபாயாக குறைந்துள்ளது. தேனி பொன்னி ரக நெல் 76 கிலோ கொண்ட மூட்டை 800 ரூபாயிலிருந்து 660 ரூபாயாகவும், இந்த ரக அரிசி குவிண்டால் 2000 ரூபாயிலிருந்து 1800 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

அதே நேரம் குறிப்பிட்ட சில ரக நெல் ரகங்கள் போதிய மகசூல் இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. டீலக்ஸ் பொன்னி ரக நெல் 800 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், அரிசி குவிண்டால் 1,900 ரூபாயிலிருந்து 2,250 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

English summary
Rain and excess supply caused the price fall of paddy in Nellai district. According to the market situation, the price of Ambai brand paddy has declined to Rs 660 from Rs 800 per bag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X