For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.115.21 கோடி: வளர்ச்சி விகிதம் 12.57

Google Oneindia Tamil News

TMB
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியி்ன் முதல் அரையாண்டு முடிவில் நிகர லாபம் ரூ.111.39 கோடியில் இருந்து ரூ.115.21 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியி்ன் முதல் அரையாண்டு முடிவில் செப்டம்பர் 30, 2011 கடந்த அரையாண்டு நிதி நிலைமையுடன் ஒப்பிடுகையில் வங்கியின் மொத்த லாபம் ரூ.190.30 கோடியில் இருந்து ரூ.214.22 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வளர்ச்சி விகிதம் 12.57 சதவீதம் ஆக உள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.111.39 கோடியில் இருந்து ரூ.115.21 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.55.12 கோடியாக உயர்ந்து 22.40 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும் வங்கியின் நிகர வட்டி வருமான விகிதம் 4.01 சதவீதத்தில் இருந்து 4.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வைப்புகள் ரூ.11.780 கோடியிலிருந்து ரூ.14.494 கோடியாக உயர்ந்து 23.79 வளர்ச்சியை அடைந்துள்ளது.

அதே போல் கடன்கள் ரூ.8,638 கோடியில் இருந்து ரூ.11,266 கோடியாக அதிகரித்து அதன் வளர்ச்சி விகிதம் 30.45 சதவீதமாக உள்ளது. வங்கியின் மொத்த வணிகம் ரூ.20.346 கோடியில் இருந்து ரூ.27,760 கோடியாக உயர்ந்து 26.61 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

English summary
At the end of the first quarter, Tamil Nadu mercantile bank's profit has increased from Rs. 111.39 crore to Rs. 115.21 crore. Bank's growth rate has touched 12.57%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X