For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்பாட்டு பிரச்சனை: சிறையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு அடி உதை: மருத்துவமனையில் அனுமதி

By Siva
Google Oneindia Tamil News

Madhu Koda
ராஞ்சி: சிறையில் சாப்பாடு சரியில்லை என்று கூறி உண்ணாவிரதம் இருந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவை போலீசார் அடித்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரூ. 4,000 கோடி பணத்தை சுருட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட கோடா கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ராஞ்சி சிறையில் உள்ளார். அவரும், 4 அமைச்சர்களும் சிறையில் உள்ள விஐபி அறையில் உள்ளனர்.

அங்கு கோடா இன்று சக கைதிகளால் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. அங்குள்ளவர்களை கலைந்து போகச் செய்ய போலீசார் தடியடி நடத்தினர். இதில் கோடா காயம் அடைந்தார். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோடா அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான பார்வையாளர்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்தனர். இதையடுத்து கோடா பொது வார்டுக்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்தார் என்று சிறை அதிகார் பிர்சா முண்டா தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து கோடா கூறியதாவது,

சிறையில் வழங்கும் உணவு சரியில்லை என்று கண்டித்து நானும், பிற கைதிகளும் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம். உணவின் தரத்தை சோதிக்கச் சென்ற என்னை சிறை ஊழியர்கள் தாக்கினர் என்றார்.

English summary
Former Jharkhand Chief Minister, Madhu Koda, who was sent to jail over Rs 4,000 crore money laundering scam, has been beaten up inside the prison. According to sources, Koda was assaulted by his fellow prisoners. But Koda told that he was in hunger strike with fellow inmates condemnind bad food in the prison and attacked by the jail staff while trying to check the quality of the food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X