For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திரா காந்தி நினைவு தினம்- பிரதீபா பாட்டீல், பிரதமர், சோனியா அஞ்சலி

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 27வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி அவரது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி டெல்லியில் உள்ள சக்தி ஸ்தல் எனப்படும் அவரது நினைவிடத்தில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல அனைத்து மாநிலங்களிலும், மாநில அரசுகள் சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் இந்திரா காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

English summary
Former Prime Minister Indira Gandhi was remembered on her 27th death anniversary. President Prathiba Patil, PM Manmohan Singh, Congress President Sonia Gandhi, her son Rahul Gandhi and others paid tributes to the late leader in her memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X