For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.நகர் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களின் விதி மீறலை கண்டுகொள்ளாத 31 அதிகாரிகளும் கைது?

Google Oneindia Tamil News

CMDA Office
சென்னை: சென்னை தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை அப்பட்டமாக மீறும் வகையில் வர்த்தக நிறுவனங்கள் அதி உயர கட்டடங்களைக் கட்டிக் குவித்தபோதும் அதைக் கண்டுகொள்ளாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்மூடித்தனமாக இருந்து விட்ட 31 சிஎம்டிஏ அதிகாரிகளும் கைதாவார்களா என்றஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் அருமையான பகுதியாக இருந்த தி.நகர் இன்று சந்தைக் கடையாக மாறி மக்களின் நிம்மதியை நாறடித்து விட்டது. என்று இந்தப் பகுதி வணிக மையமாக மாறிப் போனதோ அன்றே இந்தப் பகுதியில் சட்ட மீறல்களும், விதி மீறல்களும் எகிறிப் போய் விட்டது. இன்று சென்னை தி.நகரில் உள்ள 90 சதவீத பிரமாண்ட வர்த்தக கட்டடங்கள் விதி மீறலில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் செய்த விதி மீறலுக்காக இன்று தங்களது கடைகளையும் திறக்க முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அங்கு சிறிய அளவில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள்.

இந்த நிலையில், இந்த விதி மீறல் நடந்தபோதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டபோது அதை தடுக்க முயலாமல் நடந்த சிஎம்ஏடி அதிகாரிகள் 31 பேரையும் வழக்கில் சேர்த்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப் போவதாகவும் தலைமை நீதிபதி இக்பால் அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள் முழு விவரம்:

ஐஏஎஸ் அதிகாரிகள்

  1. முகம்மது நசிமுதீன் - உறுப்பினர் செயலாளர்.
  2. எம்.ஆர்.மோகன் - உறுப்பினர் செயலாளர்
  3. விக்ரம் கபூர் - உறுப்பினர் செயலாளர்
  4. தயானந்த் கட்டாரியா - உறுப்பினர் செயலாளர்

பிளானர்கள்

  1. சுபாஷ் சந்திரா - சீஃப் பிளானர்
  2. சிவசுப்ரமணியன் - சீஃப் பிளானர்
  3. குருசாமி - சீஃப் பிளானர்
  4. ரவீந்திரன் - சீனியர் பிளானர்
  5. ராஜசேகர பாண்டியன் - சீனியர் பிளானர்
  6. தங்கபிரகாசன் - டெபுட்டி பிளானர்
  7. செல்வக்குமார் - டெபுட்டி பிளானர்
  8. பெரியசாமி - டெபுட்டி பிளானர்
  9. நாகலிங்கம் - டெபுட்டி பிளானர்
  10. ராஜேந்திரன் - டெபுட்டி பிளானர்
  11. ஜெயச்சந்திரன் - டெபுட்டி பிளானர்
  12. கிருஷ்ணக்குமார் - டெபுட்டி பிளானர்
  13. ருத்திரமூர்த்தி - டெபுட்டி பிளானர்
  14. துளசிராமன் - டெபுட்டி பிளானர்
  15. சபாபதி- உதவி பிளானர்
  16. நாகசுந்தரம் - உதவி பிளானர்
  17. மாணிக்கவாசகம் -உதவி பிளானர்
  18. நாகராஜன் -உதவி பிளானர்
  19. ராஜேந்திரன் - உதவி பிளானர்
  20. பன்னீர்செல்வம் - உதவி பிளானர்
  21. முனுசாமி -உதவி பிளானர்
  22. ரவிப்பிரசாத் - உதவி பிளானர்
  23. ஆர்.கே.மூர்த்தி - உதவி பிளானர்
  24. கிருஷ்ணக்குமார் -உதவி பிளானர்
  25. ராஜாராமன் - உதவி பிளானர்
  26. பிரேம் ஆனந்த் சுரேந்திரன் -உதவி பிளானர்
  27. ஏ.பாலசுப்ரமணியன் - உதவி பிளானர்

இந்த 31 பேர் தவிர தி.நகர் பகுதியின் கீழ் வரும் மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான பட்டியலும் தயாராகி வருகிறதாம். விரைவில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்பதால் இந்த விவகாரம் மேலும் பெரிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
31 CMDA officials, who have been indicted by Madras HC may be arrested soon in the T Nager illegal buildings case, sources say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X