For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியா Vs இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்டுகள்.. நீயா நானா?

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர் இந்தியா பைலட்டுகள், கமாண்டர்கள், நேவிகேசன் டெக்னீசியன்கள் ஆகியோருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ்சின் பைலட்டுகள், கமாண்டர்கள், நேவிகேசன் டெக்னீசியன்களுக்கும் இடையே நீயா.. நானா போட்டி நடந்து வருகிறது.

புதிய விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சி அளிப்பதில் இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு விமானத்துறை நிர்வாகம் அதிக சலுகைகள் காட்டுவதாக ஏர் இந்தியா பைலட்டுகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மோதல் காரணமாக, இந்தியா புதிதாக வாங்கவுள்ள போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை விமானத்துறை ஒத்தி வைத்துவிட்டது.

இந்த விமானங்களை இயக்கும் பயிற்சி நாளை இங்கிலாந்தின் கேட்விக் நகரில் தொடங்க இருந்தது. இந்த முதல் கட்ட பயிற்சியில் 16 பைலட்டுகள் பங்கேற்க இருந்தனர். ஆனால், இரு நிறுவனங்களின் பைலட்டுகள் இடையிலான இந்த மோதலையடுத்து பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

இதனால் பயிற்சிக்குச் சென்ற பைலட்டுகளை ஊருக்குத் திரும்பி வருமாறு விமானத்துறை உத்தரவிட்டுள்ளது.

English summary
Air India has deferred a training programme for its pilots to fly the latest Boeing 787 Dreamliner aircraft by about a month following protests by a section of its cockpit crew, airline officials said today. While two pilots are already undergoing training in Singapore, the programme to train the rest of the first batch of 16 pilots was scheduled from tomorrow at Gatwick in the UK and the southeast Asian city state, they said. The entire batch of pilots, barring the two who are already undergoing training, have been called back, they said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X